25 பிப்., 2011

குஜராத் முஸ்லிம்களின் நிலைமை - சச்சார் கமிட்டி குழும செயலாளர் விளக்கம்

புதுடெல்லி,பிப்.25: 'இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ்' என்ற அமைப்பின் சார்பாக "குஜராத்தின் மேம்பாடும், சமூக மத மாற்றங்களும்" என்ற தலைப்பில் பொருளாதாரத்திற்கான தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் (எம்.சி.ஏ.இ.ஆர்.) தலைமைப் பொருளியலாளரும், சச்சார் கமிட்டி குழுமத்தின் செயலாளருமான டாக்டர்.அபூ ஸாலிஹ் ஷெரீஃப், இந்திய அளவிலும், குஜராத்திலும் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் குறித்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
(1) வருமான அளவீட்டில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத், இன்னும் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

மேலும், மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிஸா கூட தற்போது தங்களின் நிலமையை மனித மேம்பாட்டுக் குறியீட்டிலும், ஏழ்மையிலிருந்து ஏழ்மையற்ற நிலைக்கு தன்னை முன்னேற்றி வருவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் வருமானத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் குஜராத் பசி, பட்டினி அதிகம் உள்ளோர் மாநிலப் பட்டியலில் முதலில் பதிவாகி இருப்பது அதிர்ச்சி தரக் கூடியது. வருமானம் அதிகம் உள்ள ஒரு மாநிலத்தில் பசி, பட்டினி இருப்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார்.

இதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்பொழுது, குஜராத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே வறுமையிலும், வருமானத்தில் சமமற்ற நிலையிலும் வேரூன்றி இருப்பதை உணர முடிகிறது. அதிகமான முஸ்லிம்களே ஏழ்மையான நிலையில் வலுக்கட்டாயமாக வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் குறிப்பிட்டுக் கூறவேண்டுமெனில், குஜராத்தில் பல முக்கிய அம்சங்கள் மற்ற மாநிலங்களை விட மிக அதிகமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது பின்வரும் செயல்கள் மூலம் அறிய முடிகிறது.

கிராமங்களில் 90% தார்ச் சாலைகளும், 98% மின்வசதியும், 80% வீடுகள் மின்வசதியுடனும், தினந்தோறும் 18 மணிநேரம் மின்வசதியும் பயன்படுத்தும் வகையிலும், 86% குழாய் தண்ணீர் இணைப்பும், மேன்மையான தொலைபேசி இணைப்புகளும், வங்கி, தபால் துறை, பேருந்து வசதி என்ற அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கப் பெற்ற நிலையில், பசி, பட்டினி, பாதுகாப்பின்மையால் முஸ்லிம்கள் அவதிக்குள்ளாக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

(2) கல்வி ரீதியிலும், முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் குழந்தைகள் தொடக்க நிலைப் பள்ளியில் 75 சதவிகிதம் சேர்ந்தாலும், வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உயர்நிலைப் படிப்புக்குச் செல்கின்றனர்.

(3) இந்த அறிவிப்பின் மூலம், நாம் அறியக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் குஜராத்தில் மட்டுமே 2 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். 11 சதவிகித மக்கள் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தேசிய அளவில், 13 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றொரு தகவல்.

(4) நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களின் நிலையைக் கவனிக்கும் பொழுது, அதிக அளவில் தொந்தரவுக்குட்படுத்தப்படுபவர்களில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையே அதிகம். 11 சதவிகிதம் மட்டுமே உள்ள மக்கள் தொகையில், 17 சதவிகித வழக்குகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

(5) இன்னும் மிகக் குறைந்த அளவில் பணிபுரிபவர்களும், அதிக அளவில் படிப்பறிவற்றவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். மரபு ரீதியாக பார்க்கையில் முஸ்லிம்கள் கலை, இயந்திரம் மற்றும் கருவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்த போது மற்ற மக்களை விட வைர வியாபாரத்திலும், கைத்தறி வியாபாரத்திலும் அதிக அளவில் இருந்தனர். ஆனால், இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகி விட்டது. பொருட்கள் உற்பத்தி செய்யும் பணிகளுக்கும், நிர்வாகப் பகுதியில் உள்ள வேலைகளுக்கும் இன்று அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் இத்துறையில் இவர்களுக்குள்ள 21 சதவிகித பங்கீட்டில் குஜராத்தில் 13 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது. இது மற்ற மாநிலங்களான மகராஷ்டிராவை விட (25 சதவீதம்), மேற்கு வங்கத்தை விட (21 சதவீதம்) குறைவே ஆகும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மற்ற மதத்தினருடனும் ஒப்பிடும்போது, குஜராத்வாழ் முஸ்லிம்கள் பொதுத்துறைகளில் பணி புரியவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

(6) குஜராத்தில் வெளிநாட்டு முதலீடான வெளிநாட்டு நேரடி முதலீடு எப்.டி.ஐ.ன் பயன்பாடானது, என்.ஆர்.ஐ. மற்றும் வணிக ரீதியில் அரசியல் புரிபவர்களுக்கும், நிர்வாகம் புரிபவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கக் கூடியதாக பயன்படுத்தப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் சுயதொழில் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிலைமை உள்ளதால், இந்த முதலீடானது அவர்களது சுயதொழிலை வளர்க்க எந்த விதத்திலும் பயன்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குஜராத் முஸ்லிம்கள் அதிகமான பாரபட்சத்துடனும், உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர் என்பதில் ஐயமில்லை என்றும், இதை நிருபிக்கும் விதமாக குஜராத் என்.ஆர்.இ.ஜி.எ. வில் (National Rural Employment Guarantee Act) மிகவும் மோசமான நிலையிலேயே பங்கெடுத்தது என்றும், வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள இந்தச் சூழலை வைத்து குஜராத் அரசானது மிகவும் பிற்போக்கு நிலையிலேயே இருக்கிறது என்பதை நரேந்திர மோடி அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டதற்கு சமமாகும் என்று டாக்டர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் தனது உரையில் தெரிவித்தார்.

இறுதியாக உரையாற்றிய இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸின் தலைவர் டாக்டர் மன்சூர் ஆலம், இதிலிருந்து முஸ்லிம்கள் தங்களின் நிலையையும், தாங்கள் எந்த இடத்தில் உள்ளோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தன் உரையை முடித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் முஸ்லிம்களின் நிலைமை - சச்சார் கமிட்டி குழும செயலாளர் விளக்கம்"

கருத்துரையிடுக