24 பிப்., 2011

லிபியா:விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு தமிழர் பலி

நெல்லை,பிப்.24:லிபியாவில் மேலும் ஒரு தமிழர் பலியாகியுள்ளார். இவர் மோதலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்.

நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒப்பந்த அடிப்படையில், லிபியாவின் பங்காஷி பகுதியில் வேலை பார்த்து வந்தனர். தற்போது அங்கு வெடித்துள்ள மக்கள் புரட்சியில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்களில் முருகையா பாண்டியன் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இவர் போராட்டாக்கார்கள் வீசிய குண்டு வெடித்து உயிரிழந்ததாக பாண்டியனின் குடும்பத்தினருக்கு லிபியாவிலிருந்து சக தொழிலாளர்கள் அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் முருகையா பாண்டியன் சாலை விபத்தில் சிக்கி இறந்ததாக மத்திய அரசு, லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் முருகையா பாண்டியனுடன் சேர்த்து படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக் குமாரும் தற்போது உயிரிழந்து விட்டார்.

மற்றவர்கள் ஒரு மசூதியில் தஞ்சமடைந்திருப்பதாக கடைசியாக வந்த தகவல்கள் கூறின. ஆனால் தற்போது அவர்கள் குறித்து ஒரு தகவலும் வராததால், அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
தட்ஸ்தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா:விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு தமிழர் பலி"

கருத்துரையிடுக