24 பிப்., 2011

லிபியாவுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்

பாரீஸ்,பிப்.24:மக்கள் போராட்டம் வெடித்துள்ள லிபியாவுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் ஜரோப்பிய ஒன்றியம் ரத்து செய்ய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி கூறியுள்ளார்.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக முஅம்மர் கத்தாஃபி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. கடாபியின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயரிழந்துள்ளனர்.

ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உறுப்பினர் நாடுகள் கண்டிப்பதுடன் லிபியா மீது தடைவிதிக்க வேண்டும் என சர்கோசி வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவில் கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக உறுதியான தடை நடவடிக்கையை ஜரோப்பிய நாடுகள் விரைவாக எடுக்க வேண்டும் எனவும் சர்கோசி தமது கேபினட் கூட்டத்தில் தெரிவித்தார்.

லிபியாவில் நடைபெறும் தாக்குதலை சர்வதேச சமூகம் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. லிபியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என சர்கோசி கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்"

கருத்துரையிடுக