27 பிப்., 2011

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.

ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது"

கருத்துரையிடுக