6 பிப்., 2011

ஹுஸ்னி முபாரக் உடனடியாக பதவி விலகவேண்டும்: எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி,பிப்.6:அமெரிக்காவின் கைப்பாவையான ஹுஸ்னி முபாரக் உடனடியாக தனது அதிபர் பதவியை ராஜினாமாச் செய்யவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஹுஸ்னி முபாரக் ஆதரவாளர்களுக்கும்,போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள மக்களுக்குமிடையே மோதல் அதிகரித்துவரும் சூழல் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: 'அமைதியான போராட்டங்களக்கூட அடக்கி ஒடுக்கி வருகிறார் முபாரக். எகிப்தில் அமைதியை நிலைநாட்டுவதில் நிர்ணாயக பங்கு வகித்திருந்த ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கொல்வதற்கு தாக்குதல் நடத்துவோருடன் சேர்ந்துள்ளது.

மேலும் இரத்தக்களரி ஏற்படாமலிருக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முபாரக்கிடம் உடனடியாக பதவி விலக கட்டளையிட வேண்டும்.

தங்களின் உரிமைகளுக்காக அரபு உலக மக்களின் முன்னேற்றத்தின் துவக்கம்தான் இது. கொடூரமான ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை தேவை. இந்தியாவில் வாழும் மக்கள் சுதந்திரத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் போராடும் அரபுலக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்' என இ.அபூபக்கர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக் உடனடியாக பதவி விலகவேண்டும்: எஸ்.டி.பி.ஐ"

Mohamed Salih சொன்னது…

SDPI தென் சென்னை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் அறிய அணுகுங்கள் http://sdpi-southchennai.blogspot.com

கருத்துரையிடுக