13 பிப்., 2011

சமூகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முக்கியப் பங்கு: பிரதமர் மன்மோகன்சிங்

திருவனந்தபுரம்,பிப்.13: மூகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

'கேரள கெளமுதி' என்னும் மலையாள நாளிதழின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'சமூகத்தின் மனசாட்சியாக பத்திரிகையாளர்கள் திகழ்கின்றனர். அவர்கள் தங்கள் பணியில் நேர்மையாக செயல்பட்டால் சிறப்பான சமூக மாற்றத்திற்கான முகவர்களாக அவர்கள் மாறலாம். நிர்வாகம், அரசு, சமூகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறுவதில் அவர்கள் மக்களின் மனசாட்சியை பிரதிபலிப்பவர்களாக விளங்குகின்றனர்.' என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

'கேரள கெளமுதி' பத்திரிகையின் வரலாற்றுப் புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார். மேலும், அந்த பத்திரிகை குழுமத்தின் சார்பில் தொடங்கப்படவுள்ள தொலைக்காட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் அவர் இந்த விழாவில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சமூகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முக்கியப் பங்கு: பிரதமர் மன்மோகன்சிங்"

கருத்துரையிடுக