13 பிப்., 2011

அசீமானந்தாவின் காவல் பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு

அஜ்மீர்,பிப்.13:அஜ்மீர் தர்காவில் வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அசீமானந்தாவின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டது.

அசீமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை இவர் அஜ்மீர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிப்ரவரி 15 வரை இவரது காவலை நீட்டிப்பதாக நீதிபதி கூறினார்.

அசீமானந்தாவுடன் பாரத் பாய் என்பவரும் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். பாரத் பாயின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டது.

இதுக் குறித்து ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரி கூறியது: "பாரத் பாய் துபையில் வேலை பார்த்து வந்தார். அவர் வெடிகுண்டுத் தாக்குலுக்கு நிதியுதவி அளித்ததாக சந்தேகிக்கிறோம். அவருடைய வங்கிக் கணக்குகளைக் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அசீமானந்தாவின் காவல் பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு"

கருத்துரையிடுக