5 பிப்., 2011

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொராஹ்புதீன் ஷேக் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது ஆர்.டி.ஐ!

புதுடெல்லி,பிப்.5:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்த லஷ் கர்-இ‍-தொய்பா தீவிரவாதி என்று கூறி சொராஹ்புதீன் என்ற வாலிபர் சில வருடங்களுக்கு முன்னால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது போலியான என்கவுண்டர் என்ற உண்மை ஏற்கனவே வெளிவந்த நிலையில் இப்போது அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ளது. அவருடையை உடம்பில் 5 முறை குண்டு துளைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை அவரது மூளையிலும், 3 முறை கால்களிலும், மீதி ஒரு முறை உடம்பின் மேற்பகுதியிலும் துளைத்தது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட குண்டு மூளையை துளைத்து பிடறி வழியாக வெளியேறியுள்ளது.

ஆர்.டி.ஐ யில் பணிபுரியும் அஃப்ரோஸ் ஆலம் ஷாஹில் என்பவர் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டார்.

சொராஹ்புதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ-யின் கொலை வழக்கில் எத்தனையோ கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இக்கொலைக் குற்றத்தின் முக்கிய ஆவணமாக கருதப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

பி.ஜே மருத்துவக் கல்லூரி, மற்றும் அகமதாபாதில் உள்ள சிவில் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழுவால் சொராஹ்புதீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மாலை 4.00 மணி அளவில் பரிசோதனை தொடங்கியதாக மருத்துவர் குழு தெரிவிக்கிறது. அம்மருத்துவர்கள் கூறும்போது சொராஹ்புதீன் உடல் பரிசோதனை செய்யபட்ட நேரத்திலிருந்து சமார் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கூறும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சொராஹ்புதீன் மிக அருகாமையில் இருந்துதான் சுடப்பட்டுள்ளார் என்றும், அப்படி சுடப்பட்ட பொழுது அவர் படுத்திருந்த நிலையிலோ அல்லது குனிந்து இருந்த நிலையிலோ இருந்திருக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் காவல்துறையின் அறிக்கையோ சொராஹ்புதீன் தப்பி ஓட முயன்ற பொழுதுதான் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற பல எண்கவுண்டர் வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறும்போது தன்னுடைய விசாரனைக்கு சாதகமாக இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது என்றும், இது உண்மையிலேயே போலி எண்கவுண்டர் தான் என்றும் நீரூபனமாகியுள்ளது என்றார்.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கை மட்டும் முன்பே வெளியிடப்பட்டிருந்தால் காவல்துறையினர் கூறுவது திட்டமிட்ட பொய் என்பது முன்பே தெரிந்திருக்கும் என்று கூறினார்.

காவல்துறையினர் கொடுத்த அறிக்கையையும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் காவல்துறையினரால் எந்த அளவிற்கு பொய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை அறியலாம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது வழக்கறிஞர் ஹுஜேஃபா அஹமதி கூறியதும், இந்த பிரேத பரிசோதனை அறிக்கையும் ஒன்றாகியுள்ளது. கொலை நடைப்பெற்று பல மாதங்களுக்கு பின்னால் இன்று அது போலியான எண்கவுன்ட்டர் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்றார்.

சொராஹ்புதீன் அவர்கள் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் அகமதாபாதில் வைத்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் காவல்துறையினர் கூறியது சொராஹ்புதீன் லஷ் கர்-இ‍-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் தப்பி ஓட முயன்ற போது சுட்டுக் கொன்றதாகவும் கூறினர்.

ஆனால் உண்மை என்னவெனில், சொராஹ்புதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீ குஜ்ராத் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த காவல்துறையினரால் 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று கடத்தப்பட்டனர்.

சொராஹ்புதீன் ஒரு அரசு பேருந்தில் ஹைதராபாதிலிருந்து குஜராத் வந்து கொண்டிருந்த போது நவம்பர் மாதம் 26ம் தேதி அன்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2007 ஆண்டு சொராஹ்புதீனின் மனைவி கவுஸர்பீயும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக குஜராத் அரசாங்கம் கூறியது.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்க்கு இடமான இந்த கொலை வழக்கை பிரசாந்த் தாயல் மற்றும் தாயினிக் பாஸ்கர் என்ற இருவர்களை நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பின்னர் இந்த கொலை ஒரு போலியான எண்கவுண்டர் என்ற உண்மையை வெளிப்படுத்தி, டெபுடி கமிஷ்னர் டி.ஜி.வன்சாரா, ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதசாமா, மற்றும் குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி:twocircle
தமிழில்:முத்து

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொராஹ்புதீன் ஷேக் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது ஆர்.டி.ஐ!"

Unknown சொன்னது…

Not only சொராஹ்புதீன், india 95% of encounter are like that,

Unknown சொன்னது…

india is a not democratic, it cover by full of RSS, but now its not going to be lang time there's end, the end will come very soon, by Muslim

கருத்துரையிடுக