20 பிப்., 2011

போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடிய சமூக நீதிப் போராளி இர்பான் மரணம்

போபால்,பிப்.20:யூனியன் கார்பரேட் நிறுவனத்தில் விஷ வாயுக் கசிவு விபத்தில் பாதிப்படைந்த மக்களின் நீதிக்காக போராடியவர் இர்பான். 62 வயதான இர்பான் பல காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இந்நிலையில் வெள்ளிகிழமை இரவு தனது வீட்டில் மரணமடைந்தார்.

1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆகிய தேதிகளில் இரவில் யூனியன் கார்பைட் தொழிற்ச் சாலையில் ஏற்பட்ட மீதைல் ஐசோ சயனைட் விஷ வாயுக் கசிவு பேர் விபத்தில் 3000 பொது மக்கள் இறந்தனர், வருடக் கணக்கில் 25,000 இக்கும் மேலான மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போயினர். விபத்து ஏற்ப்பட்ட இரவு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பல்வேறு வியாதிகளால் பாதிப்படைந்துள்ளனர்.

1984-ம் ஆண்டு ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 'போபால் காஸ் பீடிட் மகிலா புருஷ் சந்க்ராஸ் மோர்ச்சா' என்ற அமைப்பை நிறுவி பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வழங்கி தருவதற்காக பல போராட்டங்களை நடத்தி வந்தார் இர்பான். இவர் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.

2006-ம் ஆண்டு இர்பான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ மற்றும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை கோரிக்கை விடுத்து போபாலில் இருந்து டெல்லி வரை பேரணி ஒன்றை நடத்தினார்.
2001-ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் எடுத்துக் கொண்ட பிறகு தொழிற்ச்சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விஷ வாயுக் கசிவு பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இர்பான் பொது மக்கள் கருத்தரங்கை ஏற்படுத்தினார்.

இர்பான் சென்னை, நியூ டெல்லி, மும்பை கேரளா ரைபூர் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து போபால் விஷ வாயுக் கசிவின் பாதிப்புகளை மக்களிடம் விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் பொது சமுதாயத்தில் போபால் விஷ வாயுக் கசிவிற்கான ஒருங்கிணைத்த போராட்டங்களை உருவாக்கினார்.

இவர் போபால் மகில புரூஸ் சந்கார்ஷ் மோர்ச்சா, போப்ஹல் காஸ் பீடிட் நிரஸ்ரிட், பென்ஷன் போகி சந்க்ராஷ் மோர்ச்சா , சில்றன் அகைன்ச்ட் டௌ கார்பிடே, போப்ஹால் குரூப் ஃபார் இன்பர்மேசன் அண்ட் ஆக்ட் ஆகிய சமூக அமைப்புகளில் இணைந்து செயல் பட்டுள்ளார்.

"எங்களது நீதிக்கான போராட்டத்தின் பங்கு பெற்ற இர்பான் பாய் மரணத்திற்காக வருந்துகிறோம் மேலும் நீதியைப் பெறுவதற்காக தனது வாழ் நாளின் பெரும் பகுதியை செலவிட்ட இர்பான் பாயின் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திச் செல்வோம்" என போபால் குரூப் ஆஃப் இன்பர்மசொன் அண்ட் ஆக்ட் சமூக அமைப்பைச் சேர்ந்த ரச்ன திங்கரா கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடிய சமூக நீதிப் போராளி இர்பான் மரணம்"

கருத்துரையிடுக