ஐ.நா,பிப்.20:ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிவரும் குடியேற்றங்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனது 'வீட்டோ' அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளது.
ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்(P.L.O) தயாராக்கிய தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் இதர 14 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.
முஸ்லிம்களுடன் நல்ல உறவை நிலைநாட்டுவேன் என சவடால் விடும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை முதன் முதலாக முறியடித்துள்ளது.
இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக் குறித்து மறுபரிசீலனைச் செய்வோம் என ஃபலஸ்தீன் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க காங்கிரஸிலிருந்து இத்தீர்மானத்தை 'வீட்டோ' செய்ய நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் இஸ்ரேலும் சில தகிடுதித்தங்களை செய்தது.
மேற்காசியாவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று வரும் வேளையில் அமெரிக்காவின் இந்நடவடிக்கை அந்நாட்டிற்கெதிரான கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது.
தீர்மானத்தை வாபஸ்பெற ஃபலஸ்தீனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை ஃபலஸ்தீன் பொருட்படுத்தவில்லை. புதிய குடியேற்ற நிர்மாணங்களை எதிர்க்கிறோம். ஆனால், இவ்விவகாரத்தை ஐ.நாவில் கொண்டுவருவதன் மூலம் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.
ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் குடியேற்ற நிர்மாணங்கள் சட்டவிரோதம் எனவும், அது சமாதான முயற்சிக்கு தடையாக மாறும் என பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை 130 நாடுகள் அங்கீகரித்திருந்தன.
'வீட்டோ' நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது எனவும் இது அமெரிக்க அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் பி.எல்.ஒ பொதுச் செயலாளர் யாஸர் ஆபித் ரப்போ மேற்குகரையில் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் குடியேற்றம்:ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா 'வீட்டோ' மூலம் முறியடித்தது"
கருத்துரையிடுக