20 பிப்., 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி

கொல்லம்,பிப்.20:வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கேரள புரம் என்ற இடத்தில் பட்டாணி முக்கு என்ற பகுதியில் உள்ள சிந்து என்பவரின் வீட்டின் மேல் மாடியில் குண்டுவைக்க முயற்சி செய்த பொழுதுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குண்டுவெடித்ததில் அந்த வீடும், அண்டை வீடும் சேதமடைந்தன. வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டு மதப் பிரச்சார தொடர் நிகழ்ச்சி தொடர்பான நோட்டீஸால் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது.

இப்பிரதேசத்தில் மத வன்முறையை உருவாக்குவதற்கான திட்டம் இது என அவ்வூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த பொழுதிலும், வாகனம் இல்லை எனக்கூறி அலட்சியப்படுத்தியுள்ளது போலீஸ். பின்னர் ஊர்மக்களே இந்நபரை வாகனத்தில் அழைத்துச்சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி"

கருத்துரையிடுக