21 பிப்., 2011

வீட்டோ:அமெரிக்காவிற்கு இஸ்ரேல் புகழாரம்

ஜெருசலம்,பிப்.21:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் யூதர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்புகளைக் கட்டுவதை தடுக்கும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது.

இத்தீர்மானத்தை தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது அமெரிக்கா. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு புகழாரம் சூட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

அதேவேளையில், அமெரிக்க நடவடிக்கையை கண்டித்து இன்று 'பெருங்கோப' நாளாக ஃபலஸ்தீனில் அனுஷ்டிக்கப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வீட்டோ:அமெரிக்காவிற்கு இஸ்ரேல் புகழாரம்"

கருத்துரையிடுக