21 பிப்., 2011

லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு

பிப்.21:லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் உலகின் முதல் கருவியை யேல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதிசக்திவாய்ந்த லேசர் ஆயுதங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கருவியை உருவாக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அடுத்த சந்ததியினரின் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக ஒளி பயன்படுத்தப்படும் பட்சத்தில் தங்களது கண்டுபிடிப்பு பயன்படும் என அவர்கள் கூறினர்.

யேல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் ஸ்டோன் மற்றும் அவரது குழுவினர் லேசருக்கு எந்த பொருட்கள் அடிப்படையாக உள்ளன என்பது குறித்து துவக்கத்தில் ஆய்வு செய்தனர். லேசர் வடிவமைப்பில் சமீபத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாரம்பரிய லேசர் செயல்பாட்டுடன் அவை பொருந்துவதாக இல்லை. எனவே ஒரு லேசரை உருவாக்குவதற்கு எவை பயன்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தோம் என டக்ளஸ் கூறினார்.

இந்த குழுவினர் கண்டறிந்த புதிய கருவி குறிப்பிட்ட அலை வேகத்தில் உள்ள 2 லேசர் கற்றைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. சிலிகானில் உருவாக்கப்பட்ட இக்கருவி லேசரை திரும்ப பரவ செய்து செயலிழக்க செய்யும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு"

கருத்துரையிடுக