3 பிப்., 2011

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியா...?

டெல்லி,பிப்.3:காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம்,கருணாநிதி நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 30ம் தேதி முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு சென்றார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி செய்ததால், இந்த பயணத்தின்போது காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிவாகி விடும் என இருதரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால், முதல்வர் டில்லி சென்றதும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது மூன்றாம் கட்ட விசாரணையை சி.பி.ஐ., நடத்தியது தி.மு.க., வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.

"ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிஷன், அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், சோனியாவை சந்திப்பதற்கு மதியமும், மாலையிலும் முதல்வரை அலைக்கழித்துள்ளனர். இந்த மூன்று சம்பவங்களும் தி.மு.க., தரப்பிற்கு அதிருப்தியை அளித்தன.

ஒருவழியாக, நேற்று முன்தினம் இரவு சோனியாவை முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, "காங்கிரசுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேல், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இருதரப்பும் தொடர விரும்பாததால், "இரு கட்சிகளின் சார்பில் தொகுதி பங்கீடு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அவர்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.சோனியாவை அவரது வீட்டில் முதல்வர் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை முதல்வர் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் எதிர்பார்க்காத வகையில், தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகவும், ஆட்சியில் பங்கும் காங்கிரஸ் கேட்டது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.சென்னையில் நாளை நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லை என்றால், ராகுல் பார்முலாவின் படி, காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதற்கு தமிழக காங்கிரசாரின் நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், தேர்தல் முடிவுக்கு பின் எந்த அணி ஆட்சியில் பங்கு தருகிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம். தி.மு.க.,வை பொருத்தவரை, அதிகபட்சமாக 60 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கவும், தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியில் பங்கு தருவது பற்றி முடிவு எடுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியா...?"

Mohamed Ameen சொன்னது…

DIFFERENT SORT OF DEMOCRACY IN INDIA
In the future this kind of political party democracy is going to cause a lot of problems in forming a stable government. So I think our political scientists should give some thoughts to changing the system of election. Still it is a democracy. My idea is based on a democracy without any political party at all. We have to abolish all the poliBtical parties to follow this idea. My idea is to let every 5000 people of India elect a (let us call him basic democrat) representative.

This means, 700 million voters will elect 1,40, 000 basic democrats. These basic democrats will contest the elections not based on political party basis, but based on individual moral character basis. And these 1,40, 000 basic democrats, will form the electoral college and elect the Prime Minister of India.: And then this Prime Minister will select and choose his own Ministers from the best brains in the country as the American President does.
The Prime Minister will have the powers to hire and fire the Ministers based on their competence and honesty. We can follow the same system at every Sate making use of the basic democrats to elect the State Chief Minister ( may be about 4000 basic Democrats Gujarat will elect a Chief Minister who will choose and select his own Cabinet). Once the elections are over the basic democrats have no roles to play, and no offices to hold. We can conduct a national referendum to change the constitution of India based on this idea. I am aware of many unanswered question here. Let more knowledgeable readers come forward to start a discussion forum.

கருத்துரையிடுக