மலேகான்,பிப்.7:நாசிக்கில் கடந்த ௦ஜனவரி 21,23 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் மஹாராஷ்டிரா பல்கலைக்கழகத்திலிருந்து வந்த 94 மாணவர்களை பின்னுக்கு தள்ளி முதல் பரிசை தட்டிச்சென்றார் புனே பல்கலைக்கழகம் சார்பில் கலந்துக் கொண்ட மலேகோன் ஜேஏடி கலைக் கல்லூரியைச் சேர்ந்த செய்யது தெஹ்ரீம் என்ற மாணவி.
மஹாராஷ்டிரா அரசால் அறிவியல் ஆராய்ச்சிக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்த பல்கலைக்கழகங்கள் அளவில் நடத்தப்படும் வருடாந்திர போட்டி அவிஷ்கார். இதில் புனே பல்கலைக்கழகம் சார்பில் B.Sc விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் செய்யது தெஹ்ரீம் கலந்துக்கொண்டார்.
உயிரித் தொழில்நுட்பத்தை வைத்து ஜூக்லோஅ ரேமிகெரா என்ற நுண்ணுயிர் கிருமிகளை கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு பயன்படுத்துலாம் என்பதை தெஹ்ரீம் செயற்திட்டமாக காட்டியிருந்தார்.
மும்பை பல்கலைக்கழகம் உள்பட 19 பல்கலைக்கழகத்தை சேர்ந்த 30 பேருடன் இறுதிச் சுற்றில் போட்டியிட்டு செய்யது தெஹ்ரீம் வென்றுள்ளார்.
"என்னுடைய திட்டத்தில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். பின்தங்கிய பகுதியான மலேகானிலிருந்து வந்திருப்பது பதற்றமாக இருந்தது, எனினும் நம்பிக்கை இழக்காமல் முதல் இடத்தை பிடித்தேன்" என்று தெஹ்ரீம் கூறியுள்ளார்.

1 கருத்துகள்: on "மஹாராஷ்டிரா பல்கலைகழகங்களுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் முதல் பரிசைப் பெற்ற மலேகான் மாணவி"
வாழ்த்துக்கள் சகோதரி
கருத்துரையிடுக