19 பிப்., 2011

பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு: எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இளவரசர் நியமனம்

மனாமா,பிப்.19:கடந்த சில தினங்களாக பஹ்ரைனில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நாட்டின் அனைத்து பிரிவினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு மன்னர் ஹமத், இளவரசர் ஸல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை நியமித்துள்ளார்.

நேற்று பஹ்ரைன் தொலைக்காட்சியில் உரைநிகழ்த்திய மன்னர் ஹமத் தெரிவித்ததாவது; "எல்லா பிரிவைச் சார்ந்த குடிமக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இளவரசர் நாடு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்த துவங்குவார். எனது அனைத்து மக்களோடும், நமது நேசத்திற்குரிய நாட்டின் அனைத்து மக்களோடும் நான் கோரிக்கை விடுக்கிறேன் இளவரசருடன் உள்ளார்ந்த நேர்மையுடனும் உண்மையாகவும் ஒத்துழைக்கவும். இறைவன் நாடினால் பஹ்ரைனுக்கு இதனை சாதிக்க இயலும். நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா குடிமக்களுக்கும் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்." இவ்வாறு மன்னர் உரை நிகழ்த்தினார்.

மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு: எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இளவரசர் நியமனம்"

கருத்துரையிடுக