அஹமதாபாத்,பிப்.19:குஜராத் மாநிலம் சூரத் நகரில் போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் ஹாரூண் கடிவாலா. இவரை சபர்கந்தா மாவட்டத்துக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதி மன்றத்தில் ஹாரூன் வழக்கு தொடர்ந்தார். அதில், தொடக்கத்தில் இருந்தே சூரத்தில்தான் நான் பணியாற்றி வந்துள்ளேன். இப்போது, வேறு மாவட்டத்துக்கு மாற்றியுள்ளனர். இது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து ஹாரூன் மேல் முறையீடு செய்தார். இதை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முகோபாத்யாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், போலீஸ் ஏட்டுவை சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்ற சட்டத்தில் இடமில்லை. அதே நேரத்தில் ஆள் பற்றாக்குறை மற்றும் அவசர தேவைகளுக்காக போலீஸ் ஏட்டுக்களை ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்றலாம். என்வே, ஏட்டு ஹாரூன் இடமாற்றம் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

0 கருத்துகள்: on "ஏட்டுகளை நிரந்தரமாக இடமாற்றம் செய்ய முடியாது - குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு"
கருத்துரையிடுக