1 பிப்., 2011

ஹுஸ்னி முபாரக்கிற்கு இஸ்ரேல் ஆதரவு

டெல்அவீவ்,பிப்.1:எகிப்து நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென இஸ்ரேல் கூறியுள்ளது.

எகிப்திலும், மேற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை(?)யை நிலைநாட்டுவதில் முபாரக்கை ஆதரிப்பது அவசியம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கு முக்கிய நாடுகளில் தங்களின் தூதரக பிரதிநிதிகளுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக ஹாரட்ஸ் பத்திரிகை கூறுகிறது.

ஆட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளாததை காரணங்காட்டி முபாரக்கை மேற்கத்திய நாடுகள் விமர்சித்திருந்தன. இதனால் நெருக்கடியான காலக்கட்டத்தில் முபாரக் தனிமைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவின் உற்ற தோழனான முபாரக் இஸ்ரேலுக்கும் நெருக்கமானவர்தான். காஸ்ஸாவின் மீது தடை ஏற்படுத்தும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் அளித்தவர் முபாரக்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் திரள் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு காரணமானால் அது தங்களையும் பாதிக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. எகிப்தின் நிலைமைகளைக் குறித்து மதிப்பீடுச்செய்ய இஸ்ரேலின் ராணுவ தலைமை அவசரக் கூட்டத்தை கூட்டியது. முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்தால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல மணிநேரம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்தின் நிலைமைகள் குறித்து நாங்கள் கவலையுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக இஸ்ரேலின் கூட்டாளியான முபாரக்கை இழந்து விடுவோமா? என இஸ்ரேல் கவலையில் உள்ளது. எகிப்திலிருந்து காஸ்ஸாவிற்கு செல்லும் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடு பல இடங்களிலும் சீர்குலைந்துவிட்டது. ஹமாஸ் இயக்கம் இவ்வழிகள் மூலம் ஆயுதங்களை கடத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும், எகிப்து நாட்டு சிறையிலிருந்து வெளியேறிய ஹமாஸ் போராளிகள் காஸ்ஸாவிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக்கிற்கு இஸ்ரேல் ஆதரவு"

கருத்துரையிடுக