1 பிப்., 2011

கந்தமால் கலவரம்:12 பேருக்கு கடுஞ்சிறை

ஃபுல்வானி(ஒரிஸ்ஸா),பிப்.1:கடந்த 2008-ஆம் ஆண்டு கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் வீடுகளை தீவைத்துக் கொளுத்திய வழக்கில் இரண்டு அதிவிரைவு நீதிமன்றங்கள் 12 பேருக்கு கடுஞ்சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துள்ளன.

கலவரத்தில் பலிகுடா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லெஞ்சிசுங்கா கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீவைத்துக் கொளுத்திய வழக்கில் 10 பேருக்கு 4 ஆண்டுகள் கடுஞ் சிறைத்தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 4 பேர்களை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.

ஜி உதய்கிரி போலீஸ் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியான கோதாபிஸா கிராமத்தில் வீடுகளை தீவைத்துக் கொளுத்திய வழக்கில் இரண்டுபேருக்கு மூன்று ஆண்டுகள் கடுஞ்சிறையும், 3000 ரூபாய் அபராதமும் முதல் விரைவுநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.தாஸ் விதித்தார்.

வி.ஹெச்.பி தலைவர்களில் ஒருவரான லட்சுமாணந்தா கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டமாலில் கிறிஸ்தவர்களுக்கெதிராக கலவரம் நடைபெற்றது. கலவரத்தில் 4000 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 38 பேர் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கந்தமால் கலவரம்:12 பேருக்கு கடுஞ்சிறை"

கருத்துரையிடுக