24 பிப்., 2011

உலமாக்களுக்கான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை,பிப்.24:தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் ஆலோசனை கூட்டம் வக்பு வாரிய அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் எம்.மாலிக் பெரோஸ்கான், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையாளர் பி.எம்.பசீர் அகமது, வாரிய உறுப்பினர் மற்றும் செயலாளரான ஏ.முகமது ஜமாலுதீன் உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை, 11,457 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், நலத்திட்ட உதவிகள் 660 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 63 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மீதியுள்ள தொகை போர்க்கால அடிப்படையில் மார்ச் 31-ந் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மைதீன்கான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினத்தந்தி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "உலமாக்களுக்கான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் தலைமையில் ஆலோசனை"

peer சொன்னது…

very happy to get this now only government realist u lamas life structure

கருத்துரையிடுக