23 பிப்., 2011

மாநில உருது அகாடமி குழு மாற்றியமைப்​பு

சென்னை,பிப்.23:தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உருதுமொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 2000ம் ஆண்டு 'தமிழ்நாடு மாநில உருது அகாடமி' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அகாடமியின் ஆட்சிக்குழு கடந்த 2007ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.

இப்போது குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆட்சிக் குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜாத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், சென்னை பல்கலைக்கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் நிஸார் அஹமது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது மொழித் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி.அஹமது பாஷா, கிருஷ்ணகிரி முக்தார் பத்ரி, வாணியம்பாடி முகம்மது யாகூப் அஸ்லாம், சென்னை மீயாஸி உருது அகாடமி தலைவர் முஹம்மது அஷ்ரப், கோவை அஞ்சுமன்-இ-உருது நிறுவனச் செயலாளர் சையத் பைய்ஸ் காதிரி, சென்னை மாலிக்குல் அஜீஸ், சென்னை புதுக்கல்லூரி உருதுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.மசாஃபருதீன், சென்னை கே.எம்.அஷ்பகூர் ரகுமான், கோவை கலீம், சென்னை அலீம் சபா நவீதி, சென்னை பல்கலைக்கழக உருதுத் துறை பேராசிரியர் சஜ்ஜத் உஸ்ûஸன், வாணியம்பாடி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக கல்வி மையப் பொறுப்பாளர் சுகைல் அகமது, சென்னை எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லூரி உருது மொழித் துறை தலைவர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாநில உருது அகாடமி குழு மாற்றியமைப்​பு"

கருத்துரையிடுக