28 பிப்., 2011

மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் விவாத நூலை உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பேரணி நடத்திய தடைச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து ரைட்ஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்தாம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

நகரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இவர்களை கைது செய்துள்ளதாக மாநகர போலீஸ் தலைவர் துல்கிஃப்லு அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பைக் குறித்து விவாதிக்கும் மலேசிய மொழியிலான நாவலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்பது ஹிந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கையாகும். ஆனால், திருத்தத்துடன் மட்டுமே இப்புத்தகம் படிப்பதற்காக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தப் பிறகும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இச்சம்பவம் வருத்தத்திற்குரியது எனவும், பேரணி நடத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தபிறகும் அதனையும் மீறி செயல்பட்ட ஹிந்துத்துவா அமைப்பினர் நாட்டின் சட்டத்தை அவமதித்துள்ளார்கள் என துல்கிஃப்லு தெரிவிக்கிறார். மேலும் நாவலுக்கெதிராக போராடிய இவர்களுக்கு வேறு இந்தியர்களின் ஆதரவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது"

பெயரில்லா சொன்னது…

ivanunga rss,vhp kaaranga udane shoot and site order kodukkanum illanna angeeum ethavathoru masjith udaichchiruvanunga

Abu Faheem சொன்னது…

ஒன்டவந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்துச்சாம் அந்தக்கதையா அனைத்து சலுகைகளும் சுதந்திரமும் பெற்று இந்தியாவில் வாழ்வதைவிட சுகபோகமாகவாழும் இவர்கள் அந்நாட்டையே நாசமாக்கும் காரியங்களிள் ஈடுபடும்போது அந்நாட்டு அரசு கையைகட்டிக்கொண்டு வேடிக்கையாபார்க்கும் இரும்புக்கரம்கொண்டு நசுக்கவல்லவாசெய்யும். அதைத்தானே மலேசியஅரசும் செய்கிறது இந்த பாசிசஎண்ணம்கொண்ட இந்த்ராஃப் கூட்டத்திற்க்கு பெரும்பான்மையான இந்திய வம்சாவளிமக்களின் ஆதரவு கிடையாது இவர்கள் கோயபல்ஸ் ராமகோபாலனின் சொல்கேட்டு சீரளிகின்றனர் உருப்படுவார்களா?.

பெயரில்லா சொன்னது…

மலேசிய அரசு மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஏனெனில் நாட்டில் கிளர்ச்சியை உருவாக்க இவர்கள் திட்டம் தீட்டலாம்.முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறுகளினால் இவர்கள் இந்த அளவு வளர்ந்துள்ளார்கள்.

நாமீ சொன்னது…

நாடோடிகளாய் ஆடோட்டிகொண்டு கைபர் கணவாய் வழியே வந்து மண்ணின் மைந்தர்களான திராவிடர்களை விரட்டிய வந்தேறிகளின் வழி வந்த இந்துராப்பினரால் அமைதியாக மலேசியாவில் பல வருடங்கள் ஒற்றுமையாக வாழும் தமிழர்களின் இருப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

king of tippu sulthan சொன்னது…

the govd have to do like that pepole visa plock list and one year jail

கருத்துரையிடுக