13 பிப்., 2011

ஹைதராபாத்:மீலாதுன்நபி விழாவிற்கா​ன ஏற்பாடுகளு​க்கு தடை ஏற்படுத்​திய எம்எல்ஏ-வுக்கு அடி உதை

ஹைதராபாத்,பிப்.13:மீலாது விழாவிற்கான அலங்கார ஏற்பாடுகளை தடுக்க முயற்சித்ததால் இளைஞர்களால் யகுட்புரா எம்எல்ஏ மும்தாஸ் கான் அடித்து உதைக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீலாது விழாவிற்காக அலங்கார மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீஸ் அங்கு வந்து அவர்களின் அலங்கார ஏற்பாடுகளை நிறுத்தினர். உடனே அப்பகுதி இளைஞர்களுக்காக எம்பிடி தலைவர் மஜீத் உல்லாகான் ஃபர்ஹ்த் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பவானி நகர் இன்ஸ்பெக்டர் சுப்பையா இங்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாது என பொறுப்பு ஏற்றுக்கொண்டால் காவல்துறைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் போலீசார் அனுமதி கொடுத்தவுடன் அலங்கார வடிவமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் யகுட்புரா எம்எல்ஏ மும்தாஸ் கான் அப்பகுதிக்கு வந்து "இங்கு நகரம் முழுவதும் கலவரம் உண்டாக வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?" என கேள்வி எழுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டால் கோபம் மடைந்த வாலிபர்கள் "இரண்டு வருடத்திற்கு முன்பு தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் மீலாது நபியைக் கொண்டாட ஆதரிப்பேன் என வாக்குறுதி அளித்து விட்டு இப்பொழுது வந்து ஏன் இடையூறு செய்கிறாய்?" என்று கேட்டனர்.

இளைஞர்களின் திடீர் கேள்விக் கணையை பொறுத்துக் கொள்ளவியலாத எம்எல்ஏ அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி விட்டு திருப்பித் தாக்கியுள்ளார்.

எம்எல்ஏ.வின் இந்த அடாவடிச் செயல் இளைஞர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது உடனே அவர்கள் அவரைத் திருப்பித் தாக்கியுள்ளனர். எம்எல்ஏ ஒருவர் அப்பகுதி இளைஞர்களாலேயே தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைதராபாத்:மீலாதுன்நபி விழாவிற்கா​ன ஏற்பாடுகளு​க்கு தடை ஏற்படுத்​திய எம்எல்ஏ-வுக்கு அடி உதை"

கருத்துரையிடுக