13 பிப்., 2011

ஹிந்துத்து​வ பயங்கரவாதம்​: பல வழிகளில் விசாரணை - தொந்தரவுக்கு​ள்ளாகும் சாட்சிகள்

புதுடெல்லி,பிப்.13:ஹிந்துத்துவா பயங்கரவாதத்திற்கெதிரான வழக்குகளின் விசாரணைய பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் மேற்கொண்டுள்ளதால் இவ்வழக்குகளின் சாட்சிகள் தொந்தரவுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு ஏஜன்சிகளுக்கிடையே நிலவும் சேரிப்போரும், பொறாமையும் விசாரணையை பாதித்துள்ளதாகவும், ஒருங்கிணைப்பு இல்லாது போனதாகவும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்துத்துவா பயங்கரவாத நெட்வர்க்கில் தொடர்புகளை பரஸ்பரம் ஒன்றிணைக்கும் முக்கிய ஆதாரங்களான 11 மொபைல் சிம் கார்டுகளையும், 7 மொபைல் ஹேண்ட் செட்டுகளையும் புலனாய்வு ஏஜன்சிகள் கண்டெடுத்தது ஐந்து மாநிலங்களிலிருந்தாகும். இந்த ஆதாரங்களை வலுப்படுத்த உதவும் வாக்குமூலங்களை அளித்த சாட்சிகளும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களாவர். ஆனால், சாட்சிகளின் உடல்-மன சூழல்களை கருத்தில் கொள்ளாமல் புலனாய்வு ஏஜன்சிகள் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பதாக மூத்த அதிகாரியொருவர் தெரிவிக்கிறார்.

ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சட்டவிரோதமாக பலநாட்கள் கஸ்டடியில் வைத்ததால் சாட்சியம் அளித்த ஒருவரின் வேலை பறிபோனது. இத்தகைய சம்பவங்கள் வழக்கில் முக்கிய சாட்சிகளுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கெதிரான வழக்குகளின் முக்கிய சாட்சிகளுக்கு நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஏறி இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் நாடு முழுவதும் சுற்றவேண்டிய நிலைமை ஏற்படும். இதனால் வழக்குகள் பல வருடங்கள் நீள வாய்ப்புள்ளது.

பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் சமர்ப்பிக்கும் குற்றப்பத்திரிகைகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பொழுது சாட்சியங்களை அக்குவேறு ஆணிவேறாக எதிர்தரப்பு வழக்கறிஞர் விசாரிக்கையில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தப்பிக்க வழிவகுக்கும் என அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்புகளெல்லாம் ஒரு குழுவினர் நடத்திய சதித் திட்டத்தின் வாயிலாக நடந்தேறியதாகும். ஆகவே, இவ்வழக்குகளையெல்லாம் ஒன்றிணைத்து ஒரே மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் ஒரே குற்றப்பத்திரிகையின் மூலமாக அனைத்து புகார்களையும், பயங்கரவாத செயல்பாடுகளையும் விசாரணை நடத்தவேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கிடையே போட்டி நிலவுகிறது. இதர வழக்குகளில் மத்தியபிரதேச போலீஸ் சாட்சிகளை கைதுச் செய்து விசாரணைக்கு தடை ஏற்படுத்தி வருகிறது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அனைவரையும் கைதுச் செய்யும்வரை குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், சி.பி.ஐயும் பரஸ்பரம் ஒத்துக்கொண்டன. ஆனால், போட்டி தீவிரமடைந்ததால் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப் படையினரை பரஸ்பரம் ஒத்துக்கொண்டதையெல்லாம் காற்றில் பறத்திவிட்டு தேவேந்திர குப்தாவை கைதுச் செய்தனர். இதனால் சி.பி.ஐ கண்காணித்து வந்த இருவர் தலைமறைவாகினர்.

அஜ்மீர் குண்டுவெடிப்பை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் சி.பி.ஐக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பைக் குறித்து நிர்ணாயகமான ஆதாரம் கிடைத்தது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த சிம்கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கும், ஹைதராபாத் குண்டுவெடிப்பிற்கும் பயன்படுத்திய சிம்கார்டுகளுக்கு ஒத்திருந்ததாக கண்டறியப்பட்டது.

ஆனால், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக ஹரியானா தீவிரவாத எதிர்ப்புப் படையினர் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைத்தனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கெதிரான வழக்குகளின் குற்றப்பத்திரிகைளை ஒன்றுப்படுத்தி என்.ஐ.ஏ போன்ற ஒரே ஏஜன்சியிடம் ஒப்படைத்து ஒரே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கேமராவின் முன்னிலையில் விசாரணை நடத்தினால்தான் இத்தகைய வழக்குகளில் வெற்றிப்பெறவியலும்.

சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேசத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீதான விசாரணையை உறுதிச் செய்வதும், தண்டனையை பெற்றுத் தருவதும் இன்றியமையாதது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்து​வ பயங்கரவாதம்​: பல வழிகளில் விசாரணை - தொந்தரவுக்கு​ள்ளாகும் சாட்சிகள்"

கருத்துரையிடுக