புதுடெல்லி,பிப்.14:மும்பை தாக்குதல் பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற அமெரிக்காவுக்கு ஒரு குழுவை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், ஹெட்லி, அவரது மனைவி மற்றும் சிலரிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதற்காக அமெரிக்காவுக்கு ஒரு குழு அனுப்பப்படும் என்றார். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் பேச உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய புலனாய்வு அமைப்பு அமெரிக்கா சென்று ஹெட்லியிடம் சில சூழ்நிலையின் கீழ்தான் விசாரணை நடத்தியது. அது வெறும் வாக்குமூலம்தான்; ஆதாரம் இல்லை. நீதிபதி முன்னிலையில் அந்த வாக்குமூலம் பெறப்படவில்லை. எனவே தற்போது அதை ஆதாரமாக மாற்ற முயற்சித்து வருகிறோம் என அவர் கூறினார்.
மும்பை தாக்குதலுக்கு முன்பு பல்வேறு இடங்களை உளவுப் பார்த்த குற்றச்சாட்டுக்காக ஹெட்லிக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் ஹெட்லிக்கு உதவியவர்கள் குறித்து விசாரிக்க பாகிஸ்தானுக்கும் ஒரு குழு அனுப்பப்படும் என பிள்ளை தெரிவித்தார்.

0 கருத்துகள்: on "பயங்கரவாதி ஹெட்லியிடம் குழு அனுப்பி ஆதாரங்களைப் பெற இந்தியா திட்டம்"
கருத்துரையிடுக