16 பிப்., 2011

குஜராத்தில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வழக்கு: சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட்டுக்கு முன்ஜாமீன்

கோத்ரா,பிப்.16:குஜராத் மாநிலத்தில் கோத்ரா இனக் கலவரத்தின் போது இறந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்த வழக்கில் பிரபல சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் முன் ஜாமீன் பெற்றார்.

2002-ல் கோத்ரா கலவரத்தின் போது பஞ்சமகால் மாவட்டத்தில் இறந்த அடையாளம் தெரியாத 28பேரின் சடலங்கள் பானம் நதிக்கரையில் புதைக்கப்பட்டிருந்தன. இந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டன.

விசாரணையில், அந்த சடலங்களை தோண்டி எடுத்தது தீஸ்தா செடல்வாடின் தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயிஸ் கான் என்பவர் உள்பட 4 பேர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் விசாரணையை எதிர்த்து தடை ஆணை பெற்றனர்.

இந்நிலையில் இந்தத் தடை ஆணையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீஸ்தாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே சடலங்களை தோண்டி எடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனால் இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதிய தீஸ்தா, முன் ஜாமீன் கோரி கோத்ரா கலவர வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்தில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வழக்கு: சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட்டுக்கு முன்ஜாமீன்"

கருத்துரையிடுக