3 பிப்., 2011

கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழக 'ஓ' லெவல் தேர்வு - பாகிஸ்தான் மாணவர் வரலாற்றுச் சாதனை

இஸ்லாமாபாத்,பிப்.3:அடிப்படை மொழி ஆங்கிலமல்லாத நாடுகளின் 14 முதல் 17 வரையிலான வயதையுடைய மாணவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு 'ஓ' லெவல் தேர்வாகும்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட 'ஓ' லெவல் தேர்வில் 24 பிரிவுகளில் 23-இல் 'ஏ' க்ரேடைப் பெற்று வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தானைச் சார்ந்த 17 வயது மாணவர் இப்ராஹீம் ஷஹீத். இவர் பாகிஸ்தானில் எலக்ட்ரிகல் எஞ்சினீயரிங் கல்லூரி பேராசிரியரின் மகனாவார். கேம்ப்ரிட்ஜில் முக்கிய பாடமாக இயற்பியலையும், பொருளாதாரத்தையும் தேர்வுச் செய்துள்ளார் மாணவர் இப்ராஹீம் ஷஹீத்.

தனது சாதனையைக் குறித்து அவர் கூறியதாவது: "நான் வெறும் ஒரு சராசரி மாணவன்தான் என எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள் எனது தந்தையிடம் கூறுவார்கள். இதனைத் தொடர்ந்து தேர்வுகளில் உயர்ந்த வெற்றியை பெறவேண்டும் என்ற விருப்பம் எனக்கு அதிகரித்தது. பாகிஸ்தானில் தற்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் எனக்கு நிராசையுண்டு. நாட்டிற்காக ஏதேனும் நல்லது செய்ய என்னால் முடியுமென்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

எனது ரோல் மாடல் பாகிஸ்தான் அணுசக்தித் திட்டத்தின் தந்தையான அப்துல் காதிர் கான் ஆவார்" இவ்வாறு இப்ராஹீம் ஷஹீத் தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழக 'ஓ' லெவல் தேர்வு - பாகிஸ்தான் மாணவர் வரலாற்றுச் சாதனை"

கருத்துரையிடுக