3 பிப்., 2011

ஜோர்டானில் பிரதமரை மாற்றிய பிறகும் போராட்டம் தொடர்கிறது

அம்மான்,பிப்௦.3:ஜோர்டானின் புதிய பிரதமராக முன்னாள் ராணுவ ஆலோசகர் மஃரூஃப் பகீதை மன்னர் அப்துல்லாஹ் நியமித்த பொழுதும் எதிர்கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஸமீர் ரிஃபாய்க்கு பதிலாக புதிய பிரதமரை நியமித்ததால் ஒரு பலனுமில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர். விலை வாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தப்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிஃபாயிக்கெதிராக போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மன்னர் அப்துல்லாஹ் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நிர்பந்தத்திற்குள்ளானார். மன்னரின் நடவடிக்கை போதுமானது அல்ல எனவும், ரப்பர் ஸ்டாம்பான பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனவும் இஸ்லாமிய கட்சியான இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் தலைவர் ஸகீ பனீ ரஷீத் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜோர்டானில் பிரதமரை மாற்றிய பிறகும் போராட்டம் தொடர்கிறது"

கருத்துரையிடுக