இஸ்லாமாபாத்,பிப்.3:இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸை பாகிஸ்தானிலிருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
டேவிஸ் நாட்டைவிட்டு வெளியேறாமலிருக்க வெளிநாட்டு பயண கட்டுப்பாட்டு பட்டியலில் அவரது பெயரை உட்படுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூதரக அந்தஸ்தை கவனத்தில் கொண்டு அவரை ஒப்படைக்க அமெரிக்கா கோரியிருந்தது. தாக்குதல் நடத்த வருகின்றார்கள் எனக் கருதி இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களை சுட்டுக் கொன்றதாக டேவிஸ் போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். கொலை வழக்கில் டேவிஸ் தற்பொழுது சிறையிலடைக்கப்பட்டுள்ளார். வழக்கு இம்மாதம் 15-ஆம்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இரண்டுபேரை கொலைச் செய்த அமெரிக்க தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது - லாகூர் உயர்நீதிமன்றம்"
கருத்துரையிடுக