15 பிப்., 2011

ஜோஷி கொலைவழக்கு: கூடுதல் ஆதாரங்கள் வெளிவருகின்றன

ஜெய்ப்பூர்,பிப்:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட அஸிமானந்தா, பரத் மோகன்லால் ரதேஷ்வர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி கொலைத் தொடர்பாக மேலும் விபரங்கள் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸுக்கு கிடைத்துள்ளது.

ஜோஷியின் உயிருக்கு ஆபத்திருப்பதாக நான் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தேன் என அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார். அதேவேளையில், 'மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார்'தான் இக்கொலையின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் என ரதேஷ்வர் வாக்குமூலம் அளித்தார்.

குண்டுவெடிப்புகளின் ஆதாரங்களை அழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியின் கொலையை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார்தான் என்பதை முன்னரே ரதேஷ்வர் தெரிவித்திருந்தார்.

அஸிமானந்தாவும் இதைப் போன்றதொரு வாக்குமூலத்தை அளித்திருந்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடுச் செய்தது ரதேஷ்வர்தான் என ராஜஸ்தான் ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்திலிருந்து ரதேஷ்வர் கைதுச் செய்யப்பட்டார். ரதேஷ்வர் அளித்த வாக்குமூலத்தின் விபரம்:

"ஜோஷியை கொலைச் செய்வதற்கு இரண்டு முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்தியிருந்தனர். இவர்களிடமிருந்து இடைவெளியை பேண வேண்டுமென நான் ஜோஷிக்கு அடிக்கடி உபதேசித்தேன். இவர்களுடனான ஜோஷியின் நெருக்கத்தின் காரணமாக முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்களில் குண்டுவெடிப்பு நடத்துவதற்கான ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம் பாழாகிவிடுமோ என நான் அஞ்சினேன்.

ஹிந்துத்துவா புத்தி ஜீவியான ஜோஷியிடம் மேலும் திட்டங்களை நம்பி ஒப்படைத்தால் அது அவருடன் நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அறிந்து தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ் தலைமையை பாடாய்படுத்தியது. இந்த அச்சம்தான் ஜோஷியை கொலைச் செய்ய தூண்டியது.

பின்னர் இரண்டு மாதம் கழித்து 2007 டிசம்பர் கடைசியில் மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து ஜோஷியை சுட்டுக் கொன்றோம். மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் என்ற நிலையில் இந்திரேஷ் குமார்தான் ஜோஷியை கொலைச்செய்ய திட்டம் தீட்டினார்.

இவ்வழக்கில் தொடர்புடைய ஜோஷியுடன் தங்கியிருந்த ஹர்ஷத் சோலங்கி உள்பட 3 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர்தான் சோலங்கி.

ஜோஷியும், அஸிமானந்தாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பிறகு ஜோஷிக்கு அஸிமானந்தா அபயம் அளித்தார்." இவ்வாறு ரதேஷ்வர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜோஷி கொலைவழக்கு: கூடுதல் ஆதாரங்கள் வெளிவருகின்றன"

கருத்துரையிடுக