15 பிப்., 2011

எகிப்து:வேலை நிறுத்தங்கள், போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்த ராணுவம் திட்டம்

கெய்ரோ,பிப்.15:ஏகாதிபத்திய ஆட்சி புரிந்துவந்த ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமாவுக்கு பிறகு அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த எகிப்து நாட்டு ராணுவம் வேலைநிறுத்தங்கள் மாற்று போராட்டங்களை தடைச் செய்வதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளது.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் அதிகாரப்பூர்வ மையமான தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டச் செய்திகளை வெளியிடுவதற்கு அல்ஜஸீரா உள்பட வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தஹ்ரீர் சதுக்கத்தில் தற்போதும் திரண்டிருக்கும் மக்களிடம் இடத்தை காலிச்செய்ய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால், கைதுச் செய்வோம் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வருகிற வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வெற்றி பேரணி நடத்த மக்கள் தீர்மானித்துள்ளனர்.

இணையதளத்தின் மூலம் எகிப்தில் எழுச்சி பரவுவதற்கு காரணமான கூகிள் எக்ஸ்க்யூடிவ் வெய்ல் கானிம் உள்பட ஏழு பேர்களுடன் நாட்டில் கொண்டுவர வேண்டிய சீர்திருத்தங்களை குறித்து ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

10 தினங்களுக்குள் புதிய திருத்தப்பட்ட அரசியல் சட்டத்தை உருவாக்கி அதனை இரண்டு மாதத்திற்குள் மக்களின் விருப்ப வாக்கெடுப்பிற்கு விடுவது என ராணுவ கவுன்சில் தீர்மானித்துள்ளதாக ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

எகிப்தில் சுமூகமான சூழல் நிலவுவதற்காக போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் தடைச்செய்ய ராணுவம் தீர்மானித்துள்ளது. இதற்காக தொழிலாளர் யூனியன்களின் கூட்டங்கள் மற்றும் இதர ஃப்ரஃபஸனல்களின் கூட்டமைப்புகள் ஆகியன சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் சம்பளத்தை உயர்த்தக்கோரி போலீஸ்காரர்கள், பொது நிறுவன ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்துதான் போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகும். இதற்கிடையே 18 நாட்கள் நீண்ட முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சியின்போது முபாரக்கிற்கு ஆதரவாக செயல்பட்ட எகிப்து நாட்டு ஊடகங்கள் தங்கள் நிலையை மாற்றியுள்ளன. தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டுவரும் காட்சிகளை காண்பிக்கத் துவங்கியுள்ளன.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:வேலை நிறுத்தங்கள், போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்த ராணுவம் திட்டம்"

கருத்துரையிடுக