புதுதில்லி,பிப்.23:லிபியாவில் தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
லிபியாவில் உள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்துவர அந்நாட்டுக்கு சிறப்பு விமானங்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை வாசித்தார். மேலும் லிபியா, ஏமன், பஹ்ரைன் நாடுகளின் நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்த நாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் நானே தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு, அங்குள்ள இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளேன் என கிருஷ்ணா கூறினார்.
இந்தியர்களின் உதவிக்காக 24 மணிநேரமும் செயல்படும் ஹெல்ப்லைன்களை சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள் அமைத்திருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

0 கருத்துகள்: on "லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டம்"
கருத்துரையிடுக