23 பிப்., 2011

மக்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து லிபிய உள்துறை அமைச்சர் பதவிவிலகல்

வாஷிங்டன்,பிப்.23:மக்களின் புரட்சிக்கு தெரிவித்து லிபிய உள்துறை அமைச்சர் அப்துல் ஃபத்தா யூனிஸ் அல் அபிதி பதவிவிலகினார்.

லிபிய தலைவர் முஅம்மர் கத்தாஃபி பதவிவிலக வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

லிபியாவின் பெங்காஸி நகரில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து உள்துறை அமைச்சர் பதவி விலகியதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. பெங்காஸியில் பொதுமக்கள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கத்தாஃபி என்னிடம் கூறினார். அவ்வாறு நடத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பர் என அவரிடம் கூறியிருந்தேன் என அபிதி தெரிவித்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அபிதி, மக்களின் புரட்சிக்கு ஆதரவாக செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.

கத்தாஃபி பிடிவாதமானவர். அவர் பதவியில் இருந்து விலகமாட்டார். ஒன்று அவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என அபிதி கூறினார்.

மக்களின் எழுச்சியில் பங்கேற்குமாறு லிபிய பாதுகாப்புப் படைகளுக்கும் அபிதி அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து லிபிய உள்துறை அமைச்சர் பதவிவிலகல்"

கருத்துரையிடுக