லண்டன்/இஸ்லாமாபாத்,பிப்.22:பாகிஸ்தானில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் சி.ஐ.ஏவின் உளவாளி என கார்டியன் பத்திரிகை கூறுகிறது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் இப்பத்திரிகை பாகிஸ்தானில் நடத்திய விரிவான விசாரணையில் இவ்விபரம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க சிறப்புப் படையில் பணியாற்றிய ரேமண்ட் சி.ஐ.ஏ உளவாளி என்பதில் சந்தேகமில்லை என கார்டியன் கூறுகிறது.
ரேமண்ட் சி.ஐ.ஏ உளவாளி என்பது பாகிஸ்தான் அரசுக்கு தெரியும். ஆனால், அமெரிக்காவின் கடுமையான நிர்பந்தத்தால் அதனை மறைத்துவிட்டதாக கார்டியன் ரிப்போர்ட் சுட்டிக்காட்டுகிறது. இதனை சந்தேகமின்றி தெளிவானது என மூத்த பாகிஸ்தான் ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்ததாக கார்டியன் கூறுகிறது.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய தங்களுடைய ரகசியங்கள் வெளியாகிவிடுமோ என்ற பதட்டத்தில்தான் அமெரிக்கா ரேமண்ட் டேவிஸை விடுவிப்பதில் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. புதிதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் மூலமாக இவ்விவகாராம் மேலும் சிக்கலாகியுள்ளது.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஒரு ட்ராஃபிக் சிக்னலுக்கு அருகில் வைத்து இரண்டு பாகிஸ்தானியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ரேமண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டார். ரேமண்டிற்கு உதவுவதற்கு முற்பட்டு பாய்ந்து வந்த இன்னொருவர் அமெரிக்க வாகனத்தில் சிக்கி மேலும் பாகிஸ்தானி கொல்லப்பட்டார்.
இந்த வாகனத்திலிருந்தவர் தாமதிக்காமல் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார். இவர் சி.ஐ.ஏ அதிகாரி என்பதை பாகிஸ்தான் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ரேமண்ட் லாகூரில் அமெரிக்க தூதரகத்தில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அதிகாரி எனவும், தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகையைப்பெற அவருக்கு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் ஒபாமா அரசு ரேமண்டை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனைக் குறித்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
அதேவேளையில், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பணத்தை அளித்து வழக்கை வாபஸ் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. தற்காப்பிற்காக ரேமண்ட் சுட்டார் என்ற வாதத்தை போலீஸ் தள்ளுபடிச் செய்துவிட்டது. காரிலிருந்து இறங்கிய பிறகும் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது அதனை நிரூபிப்பதாக போலீஸ் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ரேமண்ட் டேவிஸ் சி.ஐ.ஏ உளவாளி - கார்டியன்"
கருத்துரையிடுக