17 பிப்., 2011

லெபனானை தாக்குவோம் - இஸ்ரேல் மிரட்டல், கப்பலை தாக்குவோம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

டெல்அவீவ்,பிப்.17:தெற்கு லெபனானில் மீண்டும் ராணுவத்தை அனுப்புவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் போராளிகளை துரத்துவதற்காக எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவோம். புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பென்னி காண்ட்சுடன் லெபனானின் எல்லையில் நடத்திய சந்திப்பின்போது யஹூத் பாரக் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனானின் மீது 33 தினங்களாக நடத்திய தாக்குதலில் 1200 லெபனான் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாஹ்வை அழித்தொழிக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகும் லட்சியம் நிறைவேறவில்லை. ஆனால், ஹிஸ்புல்லாஹ்வுக்கு பலத்த அடி கிடைத்ததாக யஹூத் பாரக் கூறுகிறார்.

லெபனான் கடல் எல்லையை கடக்கும் முன்பு இஸ்ரேலின் கடற்படை கப்பலை தாக்குவோம் என ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "லெபனானை தாக்குவோம் - இஸ்ரேல் மிரட்டல், கப்பலை தாக்குவோம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை"

பெயரில்லா சொன்னது…

sabash sariyana bathil hishbullah meethu kai vaithal yanna nadakumo yandru bayanthu valanum isreal allah sabitha ivarhalai allah vin adiyarhal than adakuvarhal ithu varalatru unmai ithu nadakum insha allah

கருத்துரையிடுக