25 பிப்., 2011

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்

தோஹா,பிப்.25:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி போராடுவது ஹீரோயிஸம் அல்ல. நான் எனது லிபியா ராணுவத்தைச் சார்ந்த எனது சகோதரர்களுக்கும், மக்களுக்கு கூறிக்கொள்கிறேன், நீங்கள் மக்களைக் கொல்வதற்கான கட்டளைகளுக்கு கீழ்படியாதீர்கள். ராணுவத்தினரில் எவருக்காவது முடியுமானால் அவர் கத்தாஃபியை கொல்லட்டும் என ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு) வழங்குகிறேன்.

அவரைச் சுட்டு வீழ்த்துங்கள். அவரின்(கத்தாஃபி) தீங்கிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.
UPI.COM

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்"

abu சொன்னது…

sareeyana uththaravoo..

கருத்துரையிடுக