9 மார்., 2011

உலகின் உத்வேகம் அளிக்கும் 100 பெண்கள் பட்டியலில் அருந்ததிராய் உள்பட 5 இந்தியர்கள்

லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.

இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில்
இடம் பிடித்துள்ளனர். பெப்ஸிகோவின் தலைவர் இந்திரா, இயக்குநர் மீரா நாயர் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவின் சித்தாந்த கலந்துரையாடல்களின் பிறப்பிடம் என கார்டியன் பத்திரிகை அருந்ததிராயை பாராட்டியுள்ளது. 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலை எழுதியவர், இரண்டாவது நாவலை எழுதுவதற்கு விருப்பங்கொள்ளாமல் இந்தியத் துணைக் கண்டத்தின் கறுப்பு பகுதிகளைக் குறித்து வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதில் முனைப்பாக உள்ளார் என கார்டியன் அருந்ததிராய் பற்றி கூறுகிறது.

சமூக ஆர்வலர்களின் பட்டியலில் சம்பத் பல்தேவி இடம்பிடித்துள்ளார். வட இந்தியாவில் 'குலாபி கேங்' என்ற அமைப்பை வழி நடத்துபவர் இவராவார். பிங்க் நிற சேலையும், மூங்கில் கம்புகளும் இவர்களின் அடையாளமாகும். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தும் ஆண்களை அதே முறையில் திருப்பித் தாக்குவது என்பது 'குலாபி கேங்கின்' பாணியாகும். நிர்பந்தமாக நடத்தப்படும் திருமணங்களிலிருந்து தப்பி வரும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் 'ஸவுத் ஹால் ப்ளாக் சிஸ்டர்ஸ்' என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான பிரக்னா பட்டேலும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.

மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகின் உத்வேகம் அளிக்கும் 100 பெண்கள் பட்டியலில் அருந்ததிராய் உள்பட 5 இந்தியர்கள்"

கருத்துரையிடுக