பிரஸ்ஸல்ஸ்,மார்ச்.9:சம்பளம் வழங்குவதில் உலகிலேயே பாரபட்சம் அதிகம் நிலவுவது ஐரோப்பிய நாடுகளில்தான் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆண்களுடன் ஒப்பிடும்பொழுது பெண்களுக்கு குறைந்த அளவே சம்பளம் கிடைப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எஸ்தோனியா, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள்தாம் இதில் முன்னணியில் இருப்பதாக ஐரோப்பியன் புள்ளிவிபர முகமை(யுரோஸ்டாட்) வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் கூறுகிறது.
எஸ்தோனியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையேயான சம்பள வித்தியாசம் 30 சதவீதமாகும். இந்த சம்பள வித்தியாசத்தில் செக் குடியரசு-26 சதவீதம், ஜெர்மனி - 23 சதவீதம், பிரிட்டன் - 21 சதவீதம், பிரான்சு - 18 சதவீதம் ஆகும்.
அதேவேளையில் இத்தாலி(5 சதவீதம்), ஸ்லோவேனியா(8.5 சதவீதம்) ஆகிய நாடுகளில் சம்பள வித்தியாசம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் சம அளவிலான சம்பள தினம் மற்றும் மகளிர் தினத்தில் இந்த புள்ளிவிபரம் வெளிவந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சம்பளம்:ஆண்-பெண் பாரபட்சத்தில் முன்னணியிலிருப்பது ஐரோப்பா"
கருத்துரையிடுக