12 மார்., 2011

சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு

சென்னை,மார்ச்.12:சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.


இதுக்குறித்து அக்கட்சின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி." என்றார்.

இவ்வறிக்கையின் போது எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் 1௦ தொகுதிகளில் முதல்கட்டமாக 6 தொகுதிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

முதல் கட்ட தொகுதி பட்டியல்
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்

6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

13 கருத்துகள்: on "சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு"

hameedfaizal சொன்னது…

முஸ்லிம்களின் மானத்தை நீங்களாவது காப்பாற்றினீர்களே!
சில லெட்டர் பேடு அமைப்புகள் திராவிடக் கழகங்களின் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஏதேனும் மடிப் பிச்சை போடுங்கள் என்று நம்முடைய சமூதாயத்தின் மானத்தை அடகு வைத்த இந்த நேரத்தில் நம்முடைய சமூதாயத்தின் பலம் என்ன என்று நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள் உங்களை ஏன் விட்டோம் என்று திராவிடக் கட்சிகள் கையை பிசையும் நேரம் அதிவிரைவில் இல்லை
ஒரு கொங்குநாடு என்ற புதிய யாருக்கும் தெரியாத கட்சிக்கு கொடுக்க மனம் வந்த கலைங்கருக்கு காயிதே மில்லத் இறக்கும்போது என்னுடைய கையைபிடித்து என்னுடைய சமூதாயத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லியதாக இதுவரை நம்மை எமாற்றிவந்தார் இனிமேல் எந்த கலைஞ்சரும் எங்கள் சமூதாயத்திற்கு தேவை இல்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மார்தட்டி வந்த உங்களை போன்ற சமூதாய சிந்தனை உள்ள கட்சிகளை நிச்சயமாக நாங்கள் ஜெயிக்க வைப்போம் .நிட்சயமாக நீங்கள் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு மிகப்பெறேயா சக்தியாக வருவீர்கள் வாழ்த்துக்கள் .
பைசல்
கீழக்கரை .

raja சொன்னது…

very very good decision

Unknown சொன்னது…

we should prove our strenth in this election.

பெயரில்லா சொன்னது…

inshaallha......vetri namadae.........

Unknown சொன்னது…

inshaallah venru kattuvom

பெயரில்லா சொன்னது…

////முஸ்லிம்களின் மானத்தை நீங்களாவது காப்பாற்றினீர்களே!
சில லெட்டர் பேடு அமைப்புகள் திராவிடக் கழகங்களின் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஏதேனும் மடிப் பிச்சை போடுங்கள் என்று நம்முடைய சமூதாயத்தின் மானத்தை அடகு வைத்த இந்த நேரத்தில் நம்முடைய சமூதாயத்தின் பலம் என்ன என்று நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள் உங்களை ஏன் விட்டோம் என்று திராவிடக் கட்சிகள் கையை பிசையும் நேரம் அதிவிரைவில் இல்லை////


Insha Allah... SDPI Take a good decision...

Unknown சொன்னது…

sdpi intha tunichalaana mudivai manamara varaverkirom vetri tolvi patri kavalai padaamal tanmaanam katka poraata arasiyalm paatayai terthettutha sdpi insha allah oru puratikku vithidum enpatil entha santhehamum illai
samutaaya sontangal sdpi kku ootu poda veetarai tayarpadutha vendum

bousal சொன்னது…

iansa all sdpi veetarai allahvidathil tholudhu...duaseivm...

faizal brunei சொன்னது…

ver very good decesion

ABDUL AZIZ Pettavaithalai சொன்னது…

ALHAMDHULILLAH...

INSHA ALLAH VELVOM.... VENDRU KATTUVOM..........

ALLAHU AKBAR..

பெயரில்லா சொன்னது…

SUberb...

பெயரில்லா சொன்னது…

Samma

Nadodi சொன்னது…

Rocking

கருத்துரையிடுக