13 மார்., 2011

ராதிகா தன்வார்:கொலையாளி கைது

புதுடெல்லி,மார்ச்.13:மகளிர் தினமான மார்ச்-8-ஆம் தேதி டெல்லியில் கொலைச் செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி ராதிகா தன்வாரின் கொலையாளி ராம்சிங் என்ற விஜய்(வயது 25) கைது செய்யப்பட்டார்.

உ.பி மாநிலம் சீதாப்பூர் விஸ்வானைச் சார்ந்த இவரை மும்பை விக்ரோலி சபர்பனில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்சிங்கை டெல்லி நீதிமன்றம் 4 தினங்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. கொலைச் செய்ய உபயோகித்த எ.315 ஃபோர் நாட்டுத் துப்பாக்கியை நேற்று காலை ராம்சிங்கின் நண்பர் ஷேக்குவின் வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்தார்.

கொலைச் செய்தபிறகு ராம்சிங் தப்புவதற்கு உதவிய அவரது நண்பர்களான தப்ரேஸ், அஷ்ரஃப் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸ் கைது செய்திருந்தது. மூன்று ஆண்டுகளாக மனதில் தேக்கிவைத்திருந்த வன்மத்தை தீர்ப்பதற்காக ராதிகாவை கொலைச் செய்தார் என கமிஷனர் தெரிவித்தார்.

முன்பு ராதிகாவை தொந்தரவுச் செய்ததற்காக ராம்சிங் தாக்கப்பட்டிருந்தார். அந்த வைராக்கியம்தான் கொலையில் முடிந்துள்ளது.

டெல்லி போலீஸ் மற்றும் ஸ்பெஷல் பிரிவின் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. ஆனால், போலீஸ் கைது செய்துள்ள நபரை தங்களுக்கு தெரியாது என ராதிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் வழக்கை விரைவாக முடிக்க மும்முரம் காட்டுவதாக ராதிகாவின் உறவினரான பிரதீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராதிகா தன்வார்:கொலையாளி கைது"

கருத்துரையிடுக