13 மார்., 2011

கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களின் கைதை கண்டித்து ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பைத்தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.

லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகனங்கள் ஓடியது. நகரத்தின் சுற்று வட்டாரங்களில் முழு அடைப்பிற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் முழு அடைப்பு பெருமாலும் பாதிக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸும், பாதுகாப்பு படையினரும் கைது செய்ததைத் தொடர்ந்துதான் கிலானி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஐ.ஜி எஸ்.எம்.ஸஹாயி தெரிவிக்கிறார்.

இளைஞர்களை கைது செய்ததைக் கண்டித்து ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் மற்றும் ஹுர்ரியத் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாலி மற்றும் பிலால் கனி லோனி ஆகியோரை முன்னெச்சரிக்கையாக போலீஸ் கைது செய்தது.

இதற்கிடையே வடக்கு கஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு"

கருத்துரையிடுக