பாக்தாத்,மார்ச்.1:இரண்டு சக ஊழியர்களை கொலைச்செய்த வழக்கில் பிரிட்டீஷ் ராணுவ வீரர் ஒருவருக்கு ஈராக் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டேரன் ஹோரையும், பிரிட்டனின் பால் மெக்கெய்கனையும் கடந்த 2009 ஆம் ஆண்டு கொலை செய்ததை பிரிட்டன் ராணுவ வீரரான டேனி ஃபிட்ஸிமன்ஸ் ஒப்புக்கொண்டார்.
ஈராக் போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சிச் செய்த வழக்கிலும் ஈராக் நீதிமன்றம் இவரை தண்டித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட அமெரிக்க-ஈராக் ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டினரை விசாரிப்பதற்கான உரிமை ஈராக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்காப்பிற்காக இரண்டு பேரை சுட்டதாக கூறிய குற்றவாளியின் வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பிரிட்டீஷ் ராணுவ வீரனுக்கு ஈராக்கில் 20 ஆண்டுகள் சிறை"
கருத்துரையிடுக