1 மார்., 2011

எகிப்து:முபாரக் பயணிக்க தடை

கெய்ரோ,மார்ச்.1:முன்னாள் பிரதமர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்ய தடைச்செய்து பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஹுஸ்னி முபாரக் மற்றும் குடும்பத்தினரின் பணம், சொத்து ஆகியன முடக்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என ப்ராஸிக்யூட்டரின் அலுவலகம் தெரிவிக்கிறது.

30 ஆண்டுகள் எகிப்து நாட்டின் ஏகாதிபத்தியவாதியாக அதிபர் பதவியில் அமர்ந்திருந்த ஹுஸ்னி முபாரக் மக்கள் எழுச்சி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பதவியை ராணுவத்திடம் கடந்த பிப்ருவரி 11-ஆம் தேதி ஒப்படைத்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் ஷரமுல் ஷேக்கில் தங்கியுள்ளார்.

முபாரக் மீதான புகார்களைக் குறித்து விசாரிப்பதற்கு வசதியாக அவர் பயணிப்பது தடைச் செய்யவும், சொத்துக்களை முடக்கவும் தீர்மானித்ததாக பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நாடுகள் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:முபாரக் பயணிக்க தடை"

கருத்துரையிடுக