துனீஸ்,மார்ச்.1:மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து துனீசியாவின் பிரதமர் முஹம்மது அல் கன்னோசி தனது பதவியை ராஜினாமாச் செய்தார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக துனீசியாவின் முன்னாள் அதிபர் போர்கிபோவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அல் பாஜி அல் ஸெப்ஸி புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
போலீசாருடன் நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முஹம்மது அல் கன்னோசி ராஜினாமா செய்திருந்தார். வெளியேற்றப்பட்ட ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் பதவியில் நீடிப்பதற்கு எதிராக துனீசியாவில் மக்கள் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஆனால் அல் ஸெப்ஸியை நியமித்தன் மூலம் ஆட்சியாளர் மாற்றினரேயொழிய ஆட்சியில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை என மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஸியாத் செர்னி
தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தி புதிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரத்தில் வரும்வரை போராட்டம் தொடரும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "துனீசிய பிரதமராக அல ஸெப்ஸி பதவியேற்பு"
கருத்துரையிடுக