10 மார்., 2011

பாலியல் கொடுமை:ஹிந்துத்துவா மடாதிபதிக்கு அமெரிக்காவில் 20 குற்றங்களுக்கு 14 ஆண்டுகள் வீதம் சிறை

வாஷிங்டன்,மார்ச்.10:ஆசிரமத்தில் பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த இந்தியாவைச் சார்ந்த பிரகாஷானாந்தா சரஸ்வதி என்ற குருஜிக்கு அமெரிக்க நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு ஹூஸ்டனில் குருஜி நிறுவிய ஆசிரம வளாகத்தில் தங்கியிருந்த பெண் பக்தர்கள்தாம் இவருடைய பாலியல் வெறிக்கு பலியாகியுள்ளனர். இவர் மீது சுமத்தப்பட்ட 20 குற்றங்களுக்கு, ஒவ்வொரு குற்றத்திற்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்க வேண்டுமெனவும் ஹூஸ்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருஜி தற்பொழுது தலைமறைவாக உள்ளார். ட்ரிஃப் வுட்டில் குருஜி நிறுவிய ஆசிரமத்தில் 1990 களின் மத்தியில் தங்களை பலமுறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக இரண்டு பெண்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் குருஜியின் ஆசிரமத்திற்கு கோயில்களும், மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. 12 பேரைக் கொண்ட நீதிபதிகளின் குழு இத்தண்டனை விதித்துள்ளது.

விசாரணையின் போது குருஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றவாளியான குருஜி தண்டனைகளை ஒன்றாக அனுபவிக்கவேண்டுமா என்பதுக் குறித்து மாவட்ட நீதிபதி சார்ல்ஸ் ராம்ஸே பின்னர் முடிவெடுப்பார்.

குருஜி மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் இருபது ஆண்டுகள் வீதம் தண்டனை வழங்க வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், 82 வயதான குருஜிக்கு அவ்வாறு அளிப்பது பயனில்லை என அவருடைய வழக்கறிஞர் தனது வாதத்தில் எடுத்துரைத்தார்.

2008-ஆம் ஆண்டு இவ்வழக்கில் கைதான குருஜி 10 லட்சம் டாலர் தொகையை ஜாமீன் தொகையாக கட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாலியல் கொடுமை:ஹிந்துத்துவா மடாதிபதிக்கு அமெரிக்காவில் 20 குற்றங்களுக்கு 14 ஆண்டுகள் வீதம் சிறை"

கருத்துரையிடுக