வாஷிங்டன்,மார்ச்.4:அரசின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ பகுப்பாய்வாளர் பிராட்லி மானிங் மீது மேலும் 22 குற்றங்களை சுமத்தியுள்ளது அமெரிக்கா.
நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்களை புரிந்தது உள்ளிட்ட குற்றங்கள் மானிங் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு மரணத்தண்டனை விதிக்க கோரவில்லை என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
வெர்ஜீனியாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மானிங். ஏழு லட்சத்திற்குமேற்பட்ட தூதரக, ராணுவ ஆவணங்களை மானிங் கசியவிட்டார் என சந்தேகிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக ஆவணங்களை கம்ப்யூட்டரிலிருந்து டவுன்லோடு செய்தது, அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் ரகசிய வீடியோ காட்சிகளை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அளித்தது உள்பட 12 குற்றங்கள் மானிங் மீது ஆரம்பத்தில் சுமத்தப்பட்டன.
அரசு கம்ப்யூட்டரிலிருந்து சட்டத்திற்கு புறம்பான ஸாஃப்ட்வெயரை பயன்படுத்தி மானிங் ஆவணங்களை கசியச் செய்துள்ளார். அமெரிக்க ராணுவ சட்டத்தின்படி இது மரணத் தண்டனைக்குரிய குற்றமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பிராட்லி மானிங் மீது மேலும் 22 குற்றங்கள்"
கருத்துரையிடுக