4 மார்., 2011

ரேமண்ட் டேவிஸுக்கு தூதரக பிரதிநிதிக்கான சலுகை வழங்க முடியாது -பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்,மார்ச்.4:பாகிஸ்தானில் 2 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற சி.ஐ.ஏவின் ஏஜண்டான ரேமண்ட் டேவிஸுக்கு தூதரக பிரநிதிக்கான சலுமையை வழங்க இயலாது என பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

37 வயதான சி.ஐ.எவின் காண்ட்ராக்டரான டேவிஸ், தன்னிடம் கொள்ளையடிக்க முயன்ற இருவரையும் தற்காப்பிற்காக சுட்டுக் கொன்றதாக விளக்கமளித்துள்ளார். மேலும், தான் தூதரக பிரநிதிக்குரிய சலுகையை பெறுவதற்கு தகுதியுடையவன் எனவும் கூறியிருந்தார்.

முன்பு அமெரிக்கா சமர்ப்பித்த தூதரக அதிகாரிகளின் பட்டியலில் ரேமண்ட் டேவிஸின் பெயர் இல்லை. பின்னர் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சூழலில்தான் பாகிஸ்தான், டேவிஸ் தூதரக பிரதிநிதிக்குரிய அந்தஸ்திற்கு தகுதியில்லாதவர் என முடிவுச் செய்தது. டேவிஸை விடுவிக்க அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் அளித்துவருகிறது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரேமண்ட் டேவிஸுக்கு தூதரக பிரதிநிதிக்கான சலுகை வழங்க முடியாது -பாகிஸ்தான் நீதிமன்றம்"

கருத்துரையிடுக