ஜெருசலம்,மார்ச்.10:கடந்த ஐந்து மாதங்களிடையே ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நடத்திவரும் சட்டவிரோத குடியேற்ற நிர்மாணங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
இஸ்ரேல் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாட்டிடிக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.
பத்து மாதங்களுக்கு நிர்மாணப் பணிகளை முடக்க வேண்டுமென 2009 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்ட பிரகடனம் அமுலில் இருக்கும் பொழுதே 114க்கும் அதிகமான குடியேற்ற நிர்மாணப் பணிகளை இஸ்ரேல் துவக்கியுள்ளது.
இதற்கு முன்பு ஜெருசலத்திற்கு வெளியேயுள்ள பிரதேசங்கள் உள்பட 1175 யூனிட்டுகள் கட்டுவதற்கான பணி துவங்கியிருந்தது. முடக்குவதற்கான கால அவகாசம் முடிந்து கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 427 வீடுகளை இஸ்ரேல் கட்டத் துவங்கியுள்ளது.
முக்கிய விபரங்களை மட்டுமே ஸ்டாட்டிடிக்ஸ் பீரோ வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்களின் கூடாரங்கள்(டெண்டுகள்) இதில் அடங்காது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் 3 மடங்கு அதிகரிப்பு"
கருத்துரையிடுக