10 மார்., 2011

கத்தாஃபியின் பிரதிநிதிகள் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்

திரிபோலி,மார்ச்.10:ராணுவமும், எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வரும் சூழலில் லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபி தனது பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்காக அனுப்பியுள்ளார்.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.

எகிப்து தலைநகரான கெய்ரோவிற்கு வருகைத் தந்துள்ள பிரதிநிதிகள் அரபு லீக்கின் தலைவர் அம்ரு மூஸாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மூத்த லிபியா அதிகாரியான அப்துற்றஹ்மான் உள்ளிட்டவர்கள் கெய்ரோவிற்கு வருகைத் தந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து, இத்தாலிக்கு புறப்பட்ட விமானங்கள் நேட்டோவின் கட்டுப்பாட்டில் பயணித்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவை விமானம் பறப்பது தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தால் ஒவ்வொரு குடிமகனும் ஆயுதத்தை கையிலெடுப்பார் என கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு ராணுவத்தினரின் தலையீட்டை அனுமதிக்க முடியாது எனவும், விமானம் பறப்பதற்கு தடை ஏற்படுத்தினால் தடுப்போம் என எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான அலி சுலைமானும் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாவியா, ராஸ் லனூஃப், மிஸ்ரத்தா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் நேற்றும் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தாஃபியின் பிரதிநிதிகள் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்"

கருத்துரையிடுக