துபாய்,மார்ச்.9:முஅம்மர் கத்தாஃபியின் சர்வாதிகார லிபிய அரசு புரட்சியாளர்களின் மீது தடைப்படாத விமானத்தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்திவரும் சூழலில் புரட்சியாளர்கள் உருவாக்கிய நேசனல் ட்ரான்சிசனல் கவுன்சிலில் கத்தாஃபிக்கு 72 மணிநேர கெடுவை விதித்துள்ளது.
முன்னாள் நீதித்துறை அமைச்சரான முஸ்தஃபா அப்துல் ஜலீல் தெரிவிக்கையில், 72 மணிநேரத்திற்குள் கத்தாஃபி லிபியாவை விட்டு வெளியேற வேண்டும். மேலும் விமானத்தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் நாங்கள் அவர் செய்த குற்றங்களுக்காக சட்டத்தின் முன்னாள் நிறுத்துவோம் என கூறியுள்ளார்.
இதற்கிடையே லிபியாவில் புரட்சியாளர்கள் மீதான ராணுவத் தாக்குதல்
தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபில் ராணுவம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளது.
மக்கள் வாழும் பகுதிகளிலும், பாலைவனத்தில் புரட்சியாளர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக நேரடி சாட்டியை மேற்கோள்காட்டி பி.பி.சி தெரிவிக்கிறது.
அல்ஜஸீராவிற்கு லிபியா புரட்சியாளர்கள் தலைவர்கள் தெரிவிக்கையில், நிபந்தனைகளுடன் கூடிய கத்தாஃபியின் வாக்குறுதியை பரிசோதித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கத்தாஃபி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகிறார் என்ற செய்தியை அரசுத் தொலைக்காட்சி வன்மையா மறுத்துள்ளது. ஆனால், பெங்காசியில் எதிர்க்கட்சி தலைவர் கத்தாஃபி பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்காசிக்கு கத்தாஃபி தனது தூதரை அனுப்பியுள்ளார். தனது சொத்துக்களை பாதுகாப்பது, குற்ற விசாரணையை தவிர்ப்பது ஆகிய கோரிக்கைகள்
கத்தாஃபி சார்பாக முக்கியமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்களை சுமத்தக்கூடாது, தன்னையும், தனது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தல் ஆகிய கோரிக்கைகளும் இதில் அடங்கும். ஆனால், கத்தாஃபி பதவி விலகும் வரை இக்கோரிக்கைகளை பரிசீலிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என நேசனல் கவுன்சிலின் தலைவர் அப்துல் ஜலீல் முஸ்தஃபா தெளிவாக தெரிவித்துள்ளார். கத்தாஃபி பதவி விலகிய பிறகு இக்கோரிக்கைகளை பரிசீலிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: on "லிபியா:புரட்சியாளர்களின் இறுதி எச்சரிக்கை 72 மணிநேரத்திற்கு பதவி விலக கத்தாஃபிக்கு கெடு"
கருத்துரையிடுக